அடி வானம் எங்கும்
இடி முழக்கம் செய்ய
இரை தேடச் சென்ற குருவி எல்லாம் மர
இலை மறைத்திருக்கும் கூடு தேடி வர
சாலை ஓரம் ஓடி ஆடி வாடி விட்ட
சிறுமியர் எல்லாம் வீடு தேடி ஓடி வர
வாசல் நின்று வாயாடி வாயாடி வயதான
சாயல் மறைக்க சாயம் போட்ட பெருசெல்லாம் இடிச்
சத்தம் கேட்டு களை(ல)ந்து செல்ல
இரவு அரக்கன் சூரியனை முழுங்கி
நிலவு மகளையும் நட்சத்திர குழந்தைகளையும்
கட்டவிழ்த்து விட்ட வேளையில்
மெத்தை மாடி வெட்ட வெளியில்
சுகமான காற்றில் தன்
சோகத்தை கலந்து
சுகமான கீதம் பாடி கொண்டிருந்தான் அவன்
பாட்டின் பொருள் வேறு என்றாலும்
பாடு பொருள் அவள் தான்
--------அருண் குமார்
No comments:
Post a Comment