Tuesday, January 17, 2017

ஜல்லிக்கட்டு

களத்தில் காளையை அடக்க வேண்டிய எம்
காளையர்கள்
காவலரோடு மல்லுக் கட்டுகின்றனர்

திமில் பிடித்து காளையை அடக்கும்
திமிர் பிடித்த கூட்டமிது
கறை பிடித்த காவலரிடம் மண்டியிடுமா?

மரபு வழி வந்த வீரம்
மரணித்துப்  போகாது

மாரில் வேல் வாங்கி
மடிந்தால் தான்
எம்தாய் குலம் மகிழும்

வீரம் விளைந்த பூமியின்
வீர விளையாட்டு
வேண்டாம் என்று எவன் சொல்லினும்
சரி என்று சொல்லி
ஒதுங்கி ஒளிந்து ஒழிந்து போகமாட்டோம்
ஏறு தழுவுவோம்
எவ்வளவு பேறு எதிர்த்தாலும்