Thursday, March 20, 2014

பதிலறியா கேள்விகள்

பனி விழும்  காலை  பொழுதில் 
பாவாடை தாவணி  அணிந்து
பாதை  கோலம்  இடும் 
கோதைகளை காண முடியவில்லை 

அயல் கொண்டிருக்கும்  கண்ணனை  எழுப்ப
அபிராமி அந்தாதி  பாடும்   அந்தணர்களை  காண முடியவில்லை 

பாதையோர பச்சை  புல் மீது 
பனி  துளி ஒன்றை 
இச்சை தீர  பார்த்த  காலம் காணவில்லை 

காரணங்கள்  என்னவோ ???
கண்டதெல்லாம்  கனவோ ???

காலங்கள் தான் கடந்தது 
கோலங்கள்  ஏன்  மறைந்தது ??

சந்ததிகள்  தான்  மாறியது
அந்தாதி ஏன்  மறைந்து  போனது ???

இயந்தரங்கள்  வந்தது
இயற்கை  என்ன ஆனது ???

விடை  தெரியா கேள்விகள் 
படை எடுத்து வருகின்றது
விளக்குங்கள் யாரும் இதன் விளக்கங்களை