Friday, February 28, 2014

பெண் சிசுவின் கதறல்

பத்து மாசம் சுமந்து
பெத்து போட்டஅம்மா நீயும்
பெண் பிள்ளையாய் பிறந்து தொலைச்சேன் நானும்

ஆம்பள புள்ள தான் வேனுன்ம்னு கேக்குறையே
அது என்ன
ஆறு மாசத்துல பொறக்குதா?
அறை வயித்து கஞ்சி குடிக்குதா?

பொம்பள புள்ளைய
பெத்து வளர்க்க துப்பில்லைனா
பெட்ரூம்ல ஏண்டி விலக்கணைச்ச

மலடின்னு பேரு வாங்கி
மடி பிச்சை கேக்குறா
மடியில வந்த மகளை
நொடியில கொல்லுறா இவ

இல்லைன்னு இத்தனை பேர் இருக்காங்க
தொல்லைன்னு நெனச்சவலுக்கு
பிள்ளையா பொறக்க வச்சுட்டானே

பொண்ணா பொறந்து- பொறந்தொடனேயே
பொணமா போகனுன்னு தான் என் விதியா??

தங்கத்துல நகை வேண்டாம்
தங்கமுனு கொஞ்ச வேண்டாம்
தாலாட்டும் பாட வேண்டாம்

படுக்க ஒரு சான் எடம் போதும்
பசிக்கு ஒரு வாய் கஞ்சி போதும்
படிக்க அரசாங்க பள்ளி போதும்

தாய் பால் வேணுன்னு கேக்குல
தண்ணி பால் தந்த கூட போதும்- ஆனா
கள்ளி பால் மட்டும் வேண்டாம் அம்மா








 




Wednesday, February 26, 2014

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம்

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்