Wednesday, February 26, 2014

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம்

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்   

3 comments:

  1. So Arun is back :) :) am very happy for u.... Good one Arun... waiting for lot more to come:)

    ReplyDelete
  2. உன் ஆசைகள் தொடராதா...
    உன் வரிகள் நீளாதா...

    ReplyDelete
  3. அளவில்லை என் ஆசைக்கு
    ஒய்வில்லை என் எழுத்துக்கு

    ReplyDelete